காடு வெட்டி குரு வாழ்க்கை படமாகிறது
அரசியல் தலைவர்கள் வாழ்க்கை கதைகள் சினிமா படமாக வெளிவந்து வரவேற்பை பெற்றுள்ளன. இந்த வரிசையில் மறைந்த வன்னியர் சங்க தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி குரு வாழ்க்கையும் சினிமா படமாக தயாராகிறது.
‘மாவீரன் ஜெ குரு” என்று படத்துக்கு பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தை தமிழ்த்தாய் பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கிறது.
அந்த பட நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காடு வெட்டி குருவின் வாழ்க்கை அதிக பொருட்செலவில் படமாக்கப்படுகிறது. இதில் முன்னணி நடிகர்- நடிகைகள் நடிக்க உள்ளனர். காடு வெட்டி குரு கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் தேர்வு நடக்கிறது. மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வும் நடக்கிறது. காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் மேற்பார்வையில் திரைக்கதை உருவாக்கப்பட்டு உள்ளது.
கொரோனா ஊரடங்கு முடிந்ததும் அரியலூர், பெரம்பலூர், நெய்வேலி, பண்ருட்டி மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடபெறும். இளம் இயக்குனர் படத்தை டைரக்டு செய்கிறார்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story