டிரைவருக்கு தொற்று; தனுஷ் பட நடிகைக்கு கொரோனா பரிசோதனை
கொரோனா வைரஸ் தொற்று அரசின் ஊரடங்கையும் மீறி நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. நடிகர், நடிகைகளும் இந்த நோய் தொற்றில் சிக்குகிறார்கள்.
அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு கொரோனா உறுதியாகி சிகிச்சை எடுக்கிறார்கள். இந்தி நடிகர் அனுபம்கெர் குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இந்தி நடிகை சாரா அலிகான் டிரைவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. சாரா அலிகான் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
தனுஷ் நடிக்கும் புதிய இந்தி படத்தில் அவருக்கு ஜோடியாக சாரா அலிகான் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாரா அலிகான் தனது வலைதள பக்கதில், “டிரைவருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.எங்கள் குடும்பத்தினர் யாருக்கும் தொற்று இல்லை. முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளோம். மும்பை மாநகாராட்சியின் அறிவுறுத்தலுக்கு நன்றி. எல்லோரும் விழிப்போடு இருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
இவர் பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகான் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story