சினிமா செய்திகள்

கொரோனா முடிந்ததும் வெளியே வந்து ஆட்டம் போட விரும்பும் அஞ்சலி + "||" + When the corona is finished Come out and want to put the game - Anjali

கொரோனா முடிந்ததும் வெளியே வந்து ஆட்டம் போட விரும்பும் அஞ்சலி

கொரோனா முடிந்ததும் வெளியே வந்து ஆட்டம் போட விரும்பும் அஞ்சலி
கொரோனாவால் அனைவரும் வீட்டுக்குள் முடங்கி உள்ளனர். வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கை பல தடவை நீட்டித்தும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறையவில்லை.

நடிகர், நடிகைகள் சினிமா படப்பிடிப்புகள் இல்லாததால் நான்கு மாதங்களாக வீட்டிலேயே இருக்கிறார்கள். வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் படப்பிடிப்புக்காக சுற்றி வந்த அவர்களால் தொடர்ந்து வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பது சோர்வை ஏற்படுத்தி உள்ளது.


சமையல், யோகா, செல்லப்பிராணிகளை கொஞ்சுதல் என்று நேரத்தை கழிக்கிறார்கள். தங்களின் விதவிதமான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நடிகை அஞ்சலி பெரிய அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே ஆடுவதுபோன்ற தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தின் கீழே, “கொரோனா பிரச்சினை முடிவுக்கு வந்ததும் வெளியே சென்று இதுபோல் ஆட்டம் போட்டு கொண்டாட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

அஞ்சலி நடிப்பில் கடந்த வருடம் பேரன்பு, சிந்துபாத், லிசா ஆகிய படங்கள் வந்தன. தற்போது அனுஷ்காவுடன் சைலன்ஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் 3 தமிழ் படங்களும் 3 தெலுங்கு படங்களும் கைவசம் உள்ளன.