நடிகர் அஜித் வீட்டிற்கு வெடி்குண்டு மிரட்டல்


நடிகர் அஜித் வீட்டிற்கு வெடி்குண்டு மிரட்டல்
x
தினத்தந்தி 18 July 2020 5:30 PM IST (Updated: 18 July 2020 5:30 PM IST)
t-max-icont-min-icon

பிரபல நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பிரபல நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் பேசிய மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

மிரட்டலையடுத்து,  அஜித் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத்தெரியவந்தது. மிரட்டல் விடுத்த நபரை  போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story