நடிகை ரம்யா நம்பீசனின் புதுமையான இணையதள தொடர்
ரம்யா நம்பீசன் பிரபலமான நடிகை என்பதும், சொந்த குரலில் இனிமையாக பாடும் திறன் மிகுந்த சிறந்த பாடகி என்பதும் தெரிந்த தகவல்.
ரம்யா நம்பீசன் பிரபலமான நடிகை என்பதும், சொந்த குரலில் இனிமையாக பாடும் திறன் மிகுந்த சிறந்த பாடகி என்பதும் தெரிந்த தகவல். அவர் இப்போது அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து இருக்கிறார். டைரக்டர் பத்ரி வெங்கடேசுடன் இணைந்து, ‘ரம்யா நம்பீசன் என்கோர்’ என்ற பெயரில், புதுமையான இணையதள தொடரை தொடங்கி இருக்கிறார்.
இந்த நிகழ்ச்சிக்கு, ‘சூரிய அஸ்தமன குறிப்பேடுகள்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
இதுபற்றி அவர் கூறியதாவது:-
“நம்மை சுற்றியுள்ள அற்புதமான மனிதர்களால் உருவாக்கப்பட்ட அழகான தருணங்களை பல்வேறு அன்றாட பணிகளுக்கு இடையே கவனிக்காமல் இருந்து வருகிறோம். இதை நம் வருங்காலத்தில்தான் உணர்வோம். இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் இந்த தொடர்.
இதை பார்ப்பவர்கள் தங்களை அடையாளப்படுத்தி புதுப்பித்துக் கொள்வார்கள். என்னுடைய ‘யூடியூப்’ சேனலில் அழகியலுடன் கூடிய இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து தருவேன்.”
இவ்வாறு ரம்யா நம்பீசன் கூறினார்.
Related Tags :
Next Story