சினிமா செய்திகள்

மழையில், தமன்னா உடற்பயிற்சி + "||" + In the rain, Tamanna exercises

மழையில், தமன்னா உடற்பயிற்சி

மழையில், தமன்னா உடற்பயிற்சி
மழையில், தமன்னா உடற்பயிற்சி
கொரோனா ஊரடங்கில் நடிகர், நடிகைகள் வீடுகளில் முடங்கி சமையல், உடற்பயிற்சி, விவசாயம் செய்வது, வீட்டை சுத்தம் செய்வது, தோட்ட வேலை என்று நேரத்தை கழிக்கிறார்கள். அது தொடர்பான புகைப்படங்கள் மட்டும் வீடியோக்களையும் வலைத்தளத்தில் வெளியிடுகின்றனர். சில நடிகைகள் பட வாய்ப்புகளை பிடிக்க விதம்விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுகின்றனர்.


இந்த நிலையில் நடிகை தமன்னா வித்தியாசமாக வீட்டின் மொட்டை மாடியில் நின்று மழையில் நனைந்தபடி உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “உடற்பயிற்சி, தெரபி, மழை ஆகியவை ஒன்றாக அமைந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மும்பை மழை எனது உடற்பயிற்சியை மகிழ்ச்சியானதாக மாற்றி இருக்கிறது“ என்று பதிவிட்டுள்ளார். தமன்னாவின் மழை உடற்பயிற்சி புகைப்படம் வைரலாகி வருகிறது. தமன்னா நடித்து கடந்த வருடம் கண்ணே கலைமானே, தேவி-2, ஆக்‌ஷன், பெட்ரோமாக்ஸ் ஆகிய படங்கள் திரைக்கு வந்தன. தற்போது 2 தெலுங்கு படங்கள் கைவசம் வைத்துள்ளார்.