படப்பிடிப்பில் பங்கேற்ற கன்னட நடிகர் கொரோனாவுக்கு பலி


படப்பிடிப்பில் பங்கேற்ற கன்னட நடிகர் கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 19 July 2020 10:15 PM GMT (Updated: 19 July 2020 8:54 PM GMT)

கொரோனா பரவல் நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனா பரவல் நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிரபலங்கள் பலர் இந்த நோயில் சிக்குகிறார்கள். பழம்பெரும் திரைப்பட பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் கொரோனாவில் மரணம் அடைந்தார். இந்த நிலையில் கன்னட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான மூத்த நடிகர் ஹுலிவானா கங்காதரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். இவர் சில தினங் களுக்கு முன்பு பிரேம லோகா என்ற தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார் அவருக்கு வயது 70. மரணம் அடைந்த ஹுலிவானா கங்காதர் நூற்றுக்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்து இருக்கிறார். உல்டா பல்டா, கிராம தேவத, சப்தவேதி உள்பட பல படங்களில் இவரது திறமை பலராலும் பாராட்டப்பட்டது. ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். ஹுலிவானா கங்காதர் மறைவுக்கு நடிகர் நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Next Story