நடிகர் அர்ஜூன் மகள், ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி


நடிகர் அர்ஜூன் மகள், ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 20 July 2020 5:49 PM IST (Updated: 20 July 2020 5:49 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் அர்ஜூன் மகள், ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்ய்யப்பட்டுள்ளது.

சென்னை,
 
நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா, பட்டத்து யானை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் சில கன்னட படங்களில் நடித்துள்ள இவர், சமீபத்தில் அர்ஜூன் இயக்கத்தில் உருவான 'சொல்லி விடவா' படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா அர்ஜுன் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், மருத்துவ குழுவினர் அறிவுறுத்தலின்படி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த சில தினங்களாக தன்னுடன் நெருக்கமாக இருந்தவர்கள், தயவு செய்து கவனமாக இருங்கள் என்றும், அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருங்கள், தயவு செய்து முகமூடியை அணியுங்கள் என்றும் கூறியுள்ளார். சில தினங்களுக்கு முன் அர்ஜுனின் மருமகனும், நடிகருமான துருவ் சார்ஜாவிற்கும், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story