சினிமா செய்திகள்

நீண்ட வருடங்களுக்கு பிறகு தனது காரை இயக்கிய நடிகர் ரஜினிகாந்த்! + "||" + The car Driving Actor Rajinikanth

நீண்ட வருடங்களுக்கு பிறகு தனது காரை இயக்கிய நடிகர் ரஜினிகாந்த்!

நீண்ட வருடங்களுக்கு பிறகு தனது காரை இயக்கிய நடிகர் ரஜினிகாந்த்!
நீண்ட வருடங்களுக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் காரை இயக்கியிருக்கிறார்.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்களும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோரும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தி நடிகர்களான அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக நடிகர் ரஜினிகாந்த் தனது காரை செல்ப் ட்ரைவ் செய்தபடி சென்னையிலுள்ள அவரின் கேளம்பாக்கம் பண்ணை வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது. கொரோனா பரவல் காரணமாக ஓட்டுநர்கள் யாரையும் அனுமதிக்காமல் காரை தானே இயக்கி செல்வதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் நீண்ட வருடங்கள் கழித்து தனது காரை இயக்கியிருக்கிறார். முக கவசம் அணிந்து, சீட் பெல்ட் போட்டுக்கொண்டு ரஜினிகாந்த் காரை ஓட்டும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.