சினிமா செய்திகள்

பிரபல இந்தி டைரக்டர் மரணம் + "||" + Death of famous Hindi director

பிரபல இந்தி டைரக்டர் மரணம்

பிரபல இந்தி டைரக்டர் மரணம்
பிரபல இந்தி டைரக்டர் மரணம்


இந்தி டைரக்டர் ரஜத் முகர்ஜி. இவர் ஊர்மிளா மடோன்கர், பர்தீன் கான் , சோனாலி குல்கர்னி நடித்த ப்யார் துனே க்யா கியா படத்தை இயக்கி பிரபலமானார். விவேக் ஓபராய், அந்தரா மாலி நடித்த ரோட் படத்தையும் இயக்கினார். ரஜத் முகர்ஜிக்கு சில மாதங்களாக உடல் நல பாதிப்பு இருந்தது. சிறு நீரக பிரச்சினையாலும் அவதிப்பட்டார். இரண்டு வாரங்களுக்கு முன்பு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. பின்னர் குணமடைந்து வீடு திரும்பிய அவருக்கு மீண்டும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அவரை ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ரஜத் முகர்ஜி மறைவுக்கு ஊர்மிளா மடோன்கர், மனோஜ் பாஜ்பாய், உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.