சினிமா செய்திகள்

பிரபல நடிகர் மனைவிக்கு கொரோனா + "||" + Corona to the famous actor's wife

பிரபல நடிகர் மனைவிக்கு கொரோனா

பிரபல நடிகர் மனைவிக்கு கொரோனா
கொரோனா பரவல் நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.
கொரோனா பரவல் நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. நடிகர், நடிகைகள் பலர் கொரோனா தொற்றில் சிக்குகிறார்கள். அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய், சின்னத்திரை நடிகர் ரவிகிருஷ்ணா, நடிகைகள் நவ்யா சாமி, ராச்சல் ஒயிட், கன்னட நடிகர் துருவா சார்ஜா, இந்தி நடிகை சிரேனு பரிக் உள்ளிட்ட பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள். இந்த நிலையில் பிரபல இந்தி நடிகர் பிரதிக் காந்தி மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான பாமினி ஓஷா, சகோதரர் புனித் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனை பிரதிக் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். “கொரோனா எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் பாகுபாடு இல்லாமல் பாதித்து இருக்கிறது. நானும் எனது மனைவியும் வீட்டில் எங்களை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறோம். எனது சகோதரர் புனித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கொரோனாவுக்கு எதிராக வலிமையாக போராடுகிறோம்” என்று பதிவிட்டுள்ளார். பிரதிக் காந்தி இந்தியில் மிட்ரான். லவ்யாத்ரி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். குஜராத்தி மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.