பகுத்து அறிந்த பின் பண்பிழப்பது எவ்வாறு? கமல்ஹாசன் கவிதை


பகுத்து அறிந்த பின் பண்பிழப்பது எவ்வாறு? கமல்ஹாசன் கவிதை
x
தினத்தந்தி 21 July 2020 10:15 PM GMT (Updated: 21 July 2020 8:26 PM GMT)

கந்த சஷ்டி கவசத்தை அவமதிக்கும் சர்ச்சை வீடியோ சமீபத்தில் வெளியாகி எதிர்ப்பை கிளப்பியது.

கந்த சஷ்டி கவசத்தை அவமதிக்கும் சர்ச்சை வீடியோ சமீபத்தில் வெளியாகி எதிர்ப்பை கிளப்பியது. பெரியார் சிலையை அவமதிக்கும் சம்பவங்களும் நடந்தன. இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் சமூக வலைதளத்தில் ஒரு கவிதையை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

“மனித நேயம் என்பது விபரீத குணம் உள்ளது. வெட்டிக்கொல்ல துணியும் சகோதரப் போரில்புகுந்து தவிர்க்கும் தாய்மையே வெல்லும். அத்தகைய அன்பு வேண்டாமா நமக்கு. பாவமும் புண்ணியமும் ஒருவரை ஒருவர்நாம் தின்று கொழுத்த பின் யாமையே நாம் தினல் கேவலம். என்று நாம் உணர்ந்த பின் விடிந்தால்உதித்தது இவ்வுலகு. நாம் கற்பித்த நாய்கட்கும் ஒரு தனி வீரமுண்டு வேங்கைப்புலிக்கும் முதலைக்கும் அது உண்டு. அது சமீப காலத்து சான்றோர் அவையில்மிருக உறுமலின்று வேறென்ன தோழா? உன்னை நான் சாடுவேன் என்னை நீ ஏசுவாய். இருப்பினும்அமர்ந்து நாம் உயிர்பலி தவிர்ப்பதை கடமையாய்க்கொண்ட ஒரு குடும்பமன்றோ. இதில் விடுபடும் சோதரன் மீண்டு வருவான். பகுத்து அறிந்த பின் பண்பிழப்பது எவ்வாறு?.”

இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார். எதற்காக இந்த கவிதையை அவர் வெளியிட்டுள்ளார் என்று சமூக வலைதளத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Next Story