விக்ரமின் ‘மகாவீர் கர்ணா’ கைவிடப்பட்டதா? டைரக்டர் விளக்கம்
விக்ரம் நடித்த மகாவீர் கர்ணா படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே சில நாட்கள் நடந்தது.
விக்ரம் நடித்த மகாவீர் கர்ணா படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே சில நாட்கள் நடந்தது. இந்த படத்தை ஆர்.எஸ்.விமல் இயக்கினார். சரித்திர காலத்து கதையம்சத்தில் அதிரடி படமாக தயாரானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியாகும் என்றும் அறிவித்தனர். ஆனால் விக்ரம் திடீரென்று வேறு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இயக்குனர் விமலும் தர்மராஜ்யா என்ற புதிய படத்தை இயக்க போய் விட்டார். கேரள திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த சம்பவங்களை வைத்து தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்த படத்தை எடுப்பதாக அவர் அறிவித்தார். இதனால் விக்ரமின் மகாவீர் கர்ணா படம் கைவிடப்பட்டு விட்டதாக இணைய தளங்களில் தகவல் பரவியது. இதனை டைரக்டர் விமல் மறுத்துள்ளார்.
அவர் கூறும்போது “மகாவீர் கர்ணா படம் கைவிடப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. கடந்த வருடம் இதன் படப்பிடிப்பை தொடங்கி விக்ரமின் அறிமுக காட்சிகளை படமாக்கி விட்டோம். கொரோனா ஊரடங்கு முடிந்ததும் படத்தின் டிரெய்லர் வெளியாகும். விக்ரம் கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்களை முடித்து விட்டு மகாவீர் கர்ணா படத்தில் நடிப்பார்”என்றார்.

Related Tags :
Next Story