நயன்தாரா பற்றி சர்ச்சை பதிவு டுவிட்டரை விட்டு வெளியேறிய வனிதா


நயன்தாரா பற்றி சர்ச்சை பதிவு டுவிட்டரை விட்டு வெளியேறிய வனிதா
x
தினத்தந்தி 23 July 2020 5:15 AM IST (Updated: 23 July 2020 2:15 AM IST)
t-max-icont-min-icon

நடிகை வனிதா சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.


நடிகை வனிதா சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. பீட்டர் பால் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும் முதல் மனைவியை விவாகரத்து செய்யாத நிலையில் அவரை வனிதா மணந்தது தவறு என்றும் நடிகைகள் கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி ஆகியோர் விமர்சித்தனர். எனது சொந்த வாழ்க்கையில் நீங்கள் தலையிட வேண்டாம் என்று வனிதா பதிலடி கொடுத்தார். இவர்கள் மோதல் சமூக வலைதளத்தை அதிர வைத்தது.

இந்த நிலையில் வனிதாவும் லட்சுமி ராமகிருஷ்ணனும் வலைதள நேரலையில் தோன்றி விவாதித்தனர். அப்போது இருவரும் வாடி போடி என்று சகட்டுமேனிக்கு ஒருவரையொருவர் திட்டியபடி காரசாரமாக மோதிக்கொண்டனர். ஒரு கட்டத்தில் கெட்ட வார்த்தைகளும் வெளிப்பட்டன. இது இணைய தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து வனிதா தனது டுவிட்டர் பக்கத்தில் கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணனை டேக் செய்து நயன்தாராவை வம்புக்கு இழுப்பதுபோல் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் “பிரபுதேவாவுடன் நயன்தாரா தொடர்பில் இருந்தபோது 3 குழந்தைகளின் தாயான பிரபுதேவாவின் மனைவி ரம்லத்துக்கு ஆதரவாக நீங்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை”என்று குறிப்பிட்டு இருந்தார். இதற்கு நயன்தாரா ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். “முதல் மனைவியை விவாகரத்து செய்த பின்னரே நயன்தாராவை திருமணம் செய்ய பிரபுதேவா திட்டமிட்டார், இதற்காக விவாகரத்து வழக்கும் தொடர்ந்தார். உங்களைப்போல் விவாகரத்து பெறுவதற்கு முன்பு திருமணம் செய்யவில்லை” என்று பதிவுகளை வெளியிட்டு வனிதாவை கண்டித்தனர். இந்த நிலையில் வனிதா திடீரென்று டுவிட்டரில் இருந்து வெளியேறினார்.

Next Story