“என்னை சமையல்காரியாக மாற்றிய ஊரடங்கு” -நடிகை தமன்னா


“என்னை சமையல்காரியாக மாற்றிய ஊரடங்கு” -நடிகை தமன்னா
x
தினத்தந்தி 24 July 2020 3:45 AM IST (Updated: 24 July 2020 2:00 AM IST)
t-max-icont-min-icon

“என்னை சமையல்காரியாக மாற்றிய ஊரடங்கு” -நடிகை தமன்னா

நடிகை தமன்னா கொரோனா ஊரடங்கில் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

“கொரோனா ஊரடங்கு நடிகர், நடிகைகளுக்கு கஷ்டகாலம் என்றுதான் சொல்ல வேண்டும். தினமும் அந்த ஸ்டூடியோ இந்த ஸ்டூடியோ என்று பறந்து கொண்டு இருந்தவர்களுக்கு வீட்டோடு இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு உள்ளது. சமையல் அறைக்கு கொரோனா ஊரடங்கு என்னை நெருக்கமாக்கி எனக்குள் இருக்கும் சமையல் திறமையை வெளியே கொண்டு வந்து இருக்கிறது. படங்களில் ஓய்வில்லாமல் நடிக்கும்போது, எனது வீடு எப்போதாவது வந்து போகிற ஓட்டல் மாதிரிதான் இருந்தது. அப்போது ஒரு தடவையும் நான் சமையல் செய்தது இல்லை.

கொரோனா ஊரடங்கில் நிறைய நேரம் கிடைத்ததால் சமையல் அறைக்குள் புகுந்தேன். எனக்குள் இவ்வளவு பெரிய சமையல்காரி இருப்பது இப்போதுதான் தெரிய வந்துள்ளது. சமையலை ஆரம்பித்தபோது சமையல் கூடத்தில் தேயிலை தூள் எங்கே இருக்கிறது. சர்க்கரை எந்த டப்பாவில் இருக்கிறது என்று தெரியாமல் மொத்த அலமாராவையும் தேடினேன். மிகவும் கஷ்டமாக இருந்தது. இதையெல்லாம் எப்படி ஞாபகம் வைத்து சமையல் செய்கிறார்கள் என்று நினைத்தேன். பழகியபிறகு எளிதாகி விட்டது.”

இவ்வாறு தமன்னா கூறினார்.

Next Story