நீடிக்கும் 3-ம் திருமண மோதல்: “சட்டம் கடமையை செய்ய வைப்போம்” நடிகை வனிதா எச்சரிக்கை
நடிகை வனிதா 3-வது திருமணம் செய்து கொண்டது சினிமா வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை வனிதா ஏற்கனவே மனைவி, குழந்தையுடன் இருக்கும் பீட்டர் பால் என்பவரை மனைவியை விவாகரத்து செய்யாத நிலையில் 3-வது திருமணம் செய்து கொண்டது சினிமா வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வனிதா செயலை நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, குட்டி பத்மினி, தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் கண்டித்தனர். “எனது சொந்த வாழ்க்கையில் தலையிட உங்களுக்கு உரிமை இல்லை” என்று சமூக வலைதளத்தில் வனிதா சாடினார். ஆனாலும் மோதல் ஓயவில்லை. லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி ஆகியோர் வனிதாவுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார்கள்.
லட்சுமி ராமகிருஷ்ணன் மீண்டும் இந்த விவகாரம் பற்றி கூறும்போது, “முதல் மனைவியை விவாகரத்து செய்யாதவரை படித்த வனிதா மணக்கலாமா என்று ஒரு பதிவை நான் வெளியிட்டது தவறா. கணவர்களின் இதுபோன்ற தவறுகளால் பல பெண்கள் நடுரோட்டில் நிற்பதையும் குழந்தைகள் கஷ்டப்படுவதையும் நான் பார்த்துள்ளதால் அதே கொடுமை இன்னொரு பெண்ணுக்கு நடக்க கூடாது என்ற அக்கறையில் பதிவிட்டேன். நாங்கள் செய்யப்போவதை செயலில் காட்டுவோம்” என்றார். இந்த நிலையில் டுவிட்டரில் இருந்து வெளியேறிய வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “கடவுளின் ஒவ்வொரு மகள்களுக்குள்ளும் ஒரு பெண் சிங்கம் இருக்கிறது. அது எழுந்திருக்கும் நேரம் இது, சட்டம் தன் கடமையை செய்ய வைப்போம்” என்று பதிவிட்டு சிங்கம் படத்தையும் வெளியிட்டுள்ளர்.

Related Tags :
Next Story