சோனியா அகர்வாலுக்கு 2-ம் திருமணமா?


சோனியா அகர்வாலுக்கு 2-ம் திருமணமா?
x
தினத்தந்தி 23 July 2020 11:45 PM GMT (Updated: 23 July 2020 8:41 PM GMT)

காதல் கொண்டேன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சோனியா அகர்வால்.

செல்வராகவன் இயக்கத்தில் 2003-ல் திரைக்கு வந்த காதல் கொண்டேன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சோனியா அகர்வால். இதில் நாயகனாக தனுஷ் நடித்து இருந்தார். இந்த படம் வெற்றி பெற்றது. தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். சிம்புவுடன் கோவில், விஜய்யின் மதுர மற்றும் 7ஜி ரெயின்போ காலனி, ஒரு கல்லூரியின் கதை, திருட்டுப்பயலே, புதுப்பேட்டை, வானம், சதுரங்கம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார்.

2006-ல் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர் 2010-ல் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார். மீண்டும் படங்களில் குணசித்திர வேடங்களில் நடிக்க தொடங்கினார். கடந்த வருடம் திரைக்கு வந்த விஷாலின் அயோக்யா, தடம், தனிமை ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் சோனியா அகர்வால் தனது டுவிட்டர் பக்கத்தில் திருமண புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இன்னும் மூன்று நாட்களில் என்ற பதிவை பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் சோனியா அகர்வால் 2-வது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமூக வலைதளத்தில் வாழ்த்துகளை பதிவு செய்து வருகிறார்கள். இந்த புகைப்படம் அவரது புதிய படத்தை விளம்பரப்படுத்துவதற்காக யுக்தியாக இருக்கலாம் என்றும் சிலர் கூறுகிறார்கள்.

Next Story