முழு ஊரடங்கில் வெளியே வந்த ரஜினி - மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றது எப்படி?


முழு ஊரடங்கில் வெளியே வந்த ரஜினி - மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றது எப்படி?
x
தினத்தந்தி 25 July 2020 5:30 AM GMT (Updated: 25 July 2020 5:30 AM GMT)

சென்னையில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமலில் இருந்த நேரத்தில் நடிகர் ரஜினிகாந்த், மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை,

ஜூன்19 ஆம் தேதி முதல் ஜூலை 5 ஆம் தேதி வரை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இந்த நிலையில், ஜூன் 26 ஆம் தேதி செங்கல்பட்டு எல்லைக்குள் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு ரஜினி சென்றபோது, சீட் பெல்ட் அணியாததால் அபராதம் செலுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

இது ஒருபக்கமிருக்க, முழு ஊரடங்கின் போது ரஜினி மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் தேவையில்லாமல் வெளியே சுற்றிய வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்த நிலையில், ரஜினிக்கு அபராதம் மட்டும் விதித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.Next Story