சினிமா செய்திகள்

தந்தைக்கு கொரோனா உண்மை தான் - நடிகர் விஷால் + "||" + @Vishal and his father Mr.G.K.Reddy tested positive for Covid19

தந்தைக்கு கொரோனா உண்மை தான் - நடிகர் விஷால்

தந்தைக்கு கொரோனா உண்மை தான் - நடிகர் விஷால்
தமது தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது உண்மை தான் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
சென்னை,

விஷால் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவர் தன் கைவசம் தற்போது சக்ரா மற்றும் துப்பறிவாளன் ஆகிய படங்களை வைத்திருக்கிறார். இந்த இரண்டு படங்களையும் அவர் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலமாக தயாரித்து வருகிறார்.


இந்நிலையில் தமக்கும் அதிக காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ள விஷால், தமது மேலாளருக்கும் இதே நிலை தான் என தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

தற்போது மூவரும் தனிமைப் படுத்திக் கொண்டு ஆயுர்வேத மருந்து எடுத்து வருவதாகவும், ஒரு வார காலத்திற்குள் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும்,  தற்போது நலமாக உள்ளதாகவும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் நடிகர் விஷால்  தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் விஷால் நடித்த சக்ரா படத்தை வெளியிட தடை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
நடிகர் விஷால் நடித்த சக்ரா படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.