தீபாவளிக்கு ரஜினிகாந்த், அஜித் படங்கள் மோதல்?
தீபாவளிக்கு ரஜினிகாந்த், அஜித் ஆகிய இருவர் படங்களும் மோதுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தீபாவளி பண்டிகையில் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் திரைக்கு வருவதை படக்குழுவினர் ஏற்கனவே உறுதிப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் அஜித்குமாரின் வலிமை படமும் தீபாவளிக்கு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த படம் பற்றிய விவரங்களை வெளியிடும்படி ரசிகர்கள் அரசியல் நிகழ்ச்சிகளிலும், விளையாட்டு போட்டிகள் நடக்கும் இடங்களிலும் வற்புறுத்தி பரபரப்பு ஏற்படுத்தி வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு அஜித்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டது. அடுத்த அப்டேட்டாக ரிலீஸ் தேதி வரலாம் என்று எதிர்பார்க்கின்றனர். தீபாவளி பண்டிகையில் பெரிய நடிகர்கள் படங்கள் வெளியாவதன் மூலம் ரசிகர்களை அதிக அளவு தியேட்டர்களுக்கு இழுக்கவும் ஓ.டி.டி. தளங்கள் எழுச்சியை கட்டுப்படுத்தவும் முடியும் என்று தியேட்டர் அதிபர்கள் நம்புகிறார்கள்.
அண்ணாத்த, வலிமை ஆகிய 2 படங்களும் தீபாவளிக்கு வெளியாக வேண்டும் என்றும் அவர்கள் வற்புறுத்துகின்றனர். கடந்த வருடம் பொங்கல் பண்டிகையில் ரஜினிகாந்தின் பேட்ட, அஜித்குமாரின் விஸ்வாசம் படங்கள் வெளியாகி இரண்டுமே நல்ல வசூல் பார்த்தன. அதுபோல் வருகிற தீபாவளி பண்டிகையிலும் இரு படங்களும் மோதுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Related Tags :
Next Story