ஓவியர் சாந்தனுவை காதலிக்கிறேன் - நடிகை சுருதிஹாசன்


ஓவியர் சாந்தனுவை காதலிக்கிறேன் - நடிகை சுருதிஹாசன்
x
தினத்தந்தி 22 Nov 2021 3:03 PM IST (Updated: 22 Nov 2021 3:03 PM IST)
t-max-icont-min-icon

மந்திராபேடி கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது சாந்தனு ஹசாரிகா என்ற ஓவியரை காதலிப்பதை உறுதிப்படுத்தினார்.

பிரபல நடிகர் கமல்ஹாசன் மகளாக சினிமாத்துறைக்கு வந்தாலும் தனக்கென்று ஒரு பிரத்தியேகமான இடத்தை சம்பாதித்துக் கொண்டவர் நடிகை சுருதிஹாசன். தமிழ், தெலுங்கு, இந்தியில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

பிரபல நடிகை மந்திரா பேடி தொகுத்து வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் சுருதிஹாசன் பங்கேற்றார். அப்போது மந்திராபேடி கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது சாந்தனு ஹசாரிகா என்ற ஓவியரை காதலிப்பதை உறுதிப்படுத்தினார்.

சுருதிஹாசன் கூறும்போது, ‘‘நான் சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலிக்கிறேன். எங்கள் இருவருக்கும் பெயிண்டிங், கிராபிக்ஸ், நாவல்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு முறை எனது சிநேகிதிக்கு அவர் ஒரு பெயிண்டிங்கை பரிசாக கொடுத்தார். அதன்பிறகு எனக்கு அறிமுகமானார். நாங்கள் இருவரும் ஆன்லைனில் உரையாட ஆரம்பித்தோம். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட பிறகு காதலிக்க ஆரம்பித்தோம்.

நான் இதற்கு முன் அனேகமான விஷயங்களை மறைத்து வைத்தேன். நீண்டகாலம் சிங்கிள் ஆகவே இருந்தேன். நானும் சாந்தனுவும் திருமணம் செய்து கொள்வோமோ, இல்லையோ எனக்கு தெரியாது. ஆனால் என் காதலர் பற்றிய விஷயங்களை மறைத்து வைத்தால் அவரை அவமானப்படுத்திய மாதிரி ஆகிவிடும். நான் எந்த மாதிரியான குணநலன்கள் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேனோ அதில் 80 சதவீதம் வரை சாந்தனு ஹசாரியிடம் உள்ளது” என்றார்.

1 More update

Next Story