ராஜமவுலி படம் ரூ.700 கோடிக்கு வியாபாரம்


ராஜமவுலி படம் ரூ.700 கோடிக்கு வியாபாரம்
x
தினத்தந்தி 26 Nov 2021 3:45 PM IST (Updated: 26 Nov 2021 3:45 PM IST)
t-max-icont-min-icon

‘ஆர் ஆர் ஆர்’ என்ற படத்தை உருவாக்கி இருக்கிறார் ராஜமவுலி. படம் ரூ.700 கோடிக்கு வியாபாரம் ஆகியிருக்கிறது.

இந்திய சினிமாவில் மிகப்பெரிய சாதனை ஏற்படுத்திய படம், ‘பாகுபலி.’ இது இரண்டு பாகங்களாக வெளிவந்து வெற்றிகரமாக ஓடி, வசூலில் சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து அந்த படத்தின் டைரக்டர் ராஜமவுலி, உலக அளவில் பேசப்பட்டார்.

அவர் தனது அடுத்த படைப்பாக, ‘ஆர் ஆர் ஆர்’ என்ற படத்தை உருவாக்கி இருக்கிறார். சுதந்திர போராட்ட வீரர்கள் 2 பேர்களை பற்றிய கதை, இது. சுதந்திர போராட்ட வீரர்களாக ராம்சரண், ஜுனியர் என்.டி.ஆர். ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.

இந்த படமும் 2 பாகங்களாக வெளிவர இருக்கிறது. 5 மொழிகளில் தயாராகியுள்ள ‘ஆர்ஆர்ஆர்.’ படம் ரூ.700 கோடிக்கு வியாபாரம் ஆகியிருக்கிறது. இந்தி பட உரிமை மட்டும் ரூ.100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

1 More update

Next Story