ஆந்திர வெள்ள பாதிப்புக்கு நடிகர்கள் ரூ.1 கோடி உதவி


ஆந்திர வெள்ள பாதிப்புக்கு நடிகர்கள் ரூ.1 கோடி உதவி
x
தினத்தந்தி 3 Dec 2021 5:47 PM IST (Updated: 3 Dec 2021 5:47 PM IST)
t-max-icont-min-icon

ஆந்திர வெள்ள பாதிப்புக்கு நடிகர்கள் ரூ.1 கோடி நிதியுதவி அளிப்பதாக அறிவித்து உள்ளனர்.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக ஆந்திராவில் உள்ள நெல்லூர், சித்தூர், கடப்பா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. சாலைகள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. வெள்ளத்தில் சிக்கி 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மழை நின்றும் பல இடங்களில் வெள்ளம் இன்னும் வடியவில்லை. 

இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, ஜூனியர் என்.டி.ஆர், மகேஷ்பாபு, ராம் சரண் ஆகியோர் முதல்- மந்திரி நிவாரண நிதிக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் ரூ.1 கோடி நிதியுதவி அளிப்பதாக அறிவித்து உள்ளனர். சிரஞ்சீவி டுவிட்டரில் வெளிட்டுள்ள பதிவில், ‘‘ஆந்திராவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் வேதனை அளிக்கிறது. 

நிவாரணப் பணிகளுக்காக முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சத்தை வழங்குகிறேன்” என்று கூறியுள்ளார். மகேஷ்பாபு வெளியிட்டுள்ள பதிவில், ‘‘ஆந்திர வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ரூ.25 லட்சம் வழங்குகிறேன். இந்த நெருக்கடி நேரத்தில் ஆந்திராவுக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Next Story