மகேஷ்பாபுவுக்கு அறுவை சிகிச்சை


மகேஷ்பாபுவுக்கு அறுவை சிகிச்சை
x
தினத்தந்தி 4 Dec 2021 9:50 PM IST (Updated: 4 Dec 2021 9:50 PM IST)
t-max-icont-min-icon

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மகேஷ்பாபுவுக்கு ஒரு விபத்தில் முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிவு செய்து இருக்கிறார்.

அமெரிக்கா சென்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள இருக்கிறார் என்று தெலுங்கு பட உலகில் தகவல் பரவி உள்ளது. ஐதராபாத்திலேயே அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாமா என்று அவர் யோசிப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து மகேஷ்பாபு ரசிகர்கள் ஹேஷ்டேக் உருவாக்கி சிகிச்சைக்கு பின் அவர் நல்லபடியாக குணமடைய பிரார்த்தனை செய்வதாக பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். 

மகேஷ்பாபுவுக்கு அறுவை சிகிச்சை நடப்பதையொட்டி அவர் நடித்து வந்த ‘சர்காரு வாரி பாட்டா’ படத்தின் படப்பிடிப்பை 2 மாதங்களுக்கு தள்ளி வைத்துள்ளனர். சிகிச்சை முடிந்து குணமான பிறகு படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். சர்காரு வாரி பாட்டா படத்தில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.


Next Story