குடும்பங்கள் கொண்டாடும் கதையில் சரத்குமார்-சுஹாசினி


குடும்பங்கள் கொண்டாடும் கதையில் சரத்குமார்-சுஹாசினி
x
தினத்தந்தி 5 Dec 2021 12:20 PM IST (Updated: 5 Dec 2021 12:20 PM IST)
t-max-icont-min-icon

குடும்பங்கள் கொண்டாடும் கதையம்சம் உள்ள ஒரு படத்தில் சரத்குமார்-சுஹாசினி இருவரும் மண்சார்ந்த முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ரோஷ்குமார் தயாரிக்க, பாலுச்சாமி டைரக்டு செய்கிறார். படத்தை பற்றி அவர் கூறும்போது, “இந்த காலத்துக்கு தேவையான கதையம்சம் கொண்ட படம் இது. இந்த கதையை சரத்குமார் கேட்டதும் உடனடியாக நடிக்க சம்மதித்தார். இது எனக்கான கதை என்றார். 

மண்ணின் மகளாக மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் சுஹாசினி மணிரத்னம் நடிக்கிறார். இன்னொரு முக்கிய வேடத்தில் அஷ்வதி நடிக்கிறார். இவர்களுடன் நந்தா, சிங்கம் புலி, சித்திக், கஞ்சா கருப்பு ஆகியோரும் நடிக்கிறார்கள். இது அனைத்து தரப்பினரையும் கவரும் சிறந்த திரைப்படமாக இருக்கும்” என்றார்.

Next Story