சினிமா செய்திகள்

'புஷ்பா'திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு + "||" + Trailer release of 'Pushpa' movie

'புஷ்பா'திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு

'புஷ்பா'திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு
நடிகர் அல்லு அர்ஜுன் நடித்துள்ள'புஷ்பா'திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
 
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன்  நடித்துள்ள திரைப்படம் ' புஷ்பா'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது .தேவிஸ்ரீ பிரசாத் இசைமைத்துள்ளார்.

இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக  நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். வில்லனாக  நடிகர் ஃபகத் ஃபாசில் நடித்துள்ளார். 

இந்நிலையில் 'புஷ்பா'  திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் 17ம் தேதி வெளியாகிறது.