‘8 லட்சம் மாத வாடகை’ - கத்ரினா கைப்-விக்கி கவுசால் தம்பதியின் புதிய வீடு


‘8 லட்சம் மாத வாடகை’ - கத்ரினா கைப்-விக்கி கவுசால் தம்பதியின் புதிய வீடு
x
தினத்தந்தி 9 Dec 2021 11:38 AM IST (Updated: 9 Dec 2021 11:38 AM IST)
t-max-icont-min-icon

புதிய மணமக்கள் மும்பை ஜூஹு கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள ஒரு அதி ஆடம்பரமான எட்டு மாடி கட்டிடத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளனர்.

மும்பை,

பிரபல இந்தி நடிகை கத்ரினா கைப் - விக்கி கவுசால் திருமணம் இன்று கோலாகலமாக ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூரில் நடைபெறுகிறது. இவர்கள் நீண்ட நாட்களாக காதலித்து தற்போது திருமணத்துக்கு தயாராகி உள்ளனர். ராஜஸ்தானில் உள்ள 700 வருட பழமையான சிக்ஸ் சென்ஸ் கோட்டையில் இந்த பாலிவுட் நட்சத்திரங்களின் திருமணம் நடக்கிறது.

இவர்களது ஆடம்பர திருமணத்திற்காக, கோடிக்கணக்கான செலவில், மலர்கள், வண்ண விளக்குகள் மற்றும் வரவேற்பு வளைவுகளால் சிக்ஸ் சென்ஸ் கோட்டை அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. 

திருமணத்துக்காக மணமக்கள் தங்கும் சொகுசு விடுதியின் ஒரு நாள் வாடகை ரூ.7 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் உறவினர்கள், நடிகர் நடிகைகள் தங்க அங்குள்ள ஆடம்பர ஓட்டல்களின் அறைகள் அனைத்தையும் முன்பதிவு செய்துள்ளனர்.  

புதிய மணமக்கள் மும்பை ஜூஹு கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள ஒரு அதி ஆடம்பரமான எட்டு மாடி கட்டிடத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளனர். அவர்களது திருமணத்துக்கு பிறகு, புதிய வீட்டில் கிரகப்பிரவேசம் நடத்த உள்ளனர்.

ஏற்கனவே, விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதியினர் திருமணத்துக்கு பின் வசித்துவரும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில், பெரும் தொகையை வாடகையாக கொடுத்து வீடு ஒன்றை வாடகைக்கு அவர்கள் எடுத்துள்ளனர். 

திருமணம் முடிந்த கையோடு, மும்பை திரும்பும் கத்ரினா கைப்-விக்கி கவுசால் நட்சத்திர தம்பதியினர், புதிய வீட்டில் குடியேற உள்ளனர். இதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்னரே விக்கி கவுசால் மாதம்  ரூபாய் 8 லட்சம் வாடகை கொடுத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 5 வருடங்களுக்கு தங்குவதற்கான ஒப்பந்தம் போட்டுள்ளார். முன்பணமாக ரூபாய் 1.75 கோடியினை கொடுத்துள்ளார்.

விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதியினரும் அந்த அடுக்குமாடி கட்டிடத்தில் இரண்டு தளங்களை வாங்கி உள்ளனர்.

இதனையடுத்து, ரசிகர்கள், ‘விருஷ்காவின் அண்டை வீட்டார் விக்ட்ரினா’ என்று டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

தற்போது வரை, கத்ரினா கைப் தனது சகோதரி இசபெல் கைப் உடன் மும்பையின் அந்தேரி பகுதியில் தங்கியுள்ளார். விக்கி கவுசால் தனது குடும்பத்தினருடன் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story