அனல் தெறிக்கும் சண்டை காட்சிகளுடன் வெளியானது ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் டிரைலர்


அனல் தெறிக்கும் சண்டை காட்சிகளுடன் வெளியானது ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் டிரைலர்
x
தினத்தந்தி 9 Dec 2021 1:02 PM IST (Updated: 9 Dec 2021 1:02 PM IST)
t-max-icont-min-icon

ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 7-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஐதெராபாத் ,

இயக்குனர்  ராஜமவுலி இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ (ஆர்.ஆர்.ஆர்). பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகி உள்ளது.

டிவிவி தனய்யா தயாரிக்கும் இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார். ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 7-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. அதிரடி சண்டை காட்சிகள் இடம்பெற்றுள்ள இந்த டிரைலரில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் , ஸ்ரேயா சரண் , சமுத்திரக்கனி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

டிரைலரில் போலீஸ் அதிகாரியாக வரும் ராமச்சரண் , ஜூனியர் என்.டி.ஆர் அவர்களின் நண்பனாக இருப்பது போன்று காட்சிகள் அமைந்துள்ளது. தனது முந்தைய திரைப்படம் பாகுபலி -2 போன்றே இயக்குனர்  ராஜமவுலி  இந்த திரைப்படத்திலும் உச்சகட்ட சண்டை காட்சிகளையும் , பிரமாண்ட ஸ்டண்ட் காட்சிகளையும் படமாக்கியுள்ளார்.

Next Story