இயக்குனர்களை அவமதித்ததாக புதுமுக நடிகருக்கு எதிர்ப்பு
இயக்குனர்களை புதுமுக நடிகர் அஸ்வின் அவமதித்ததாக சமூக வலைத்தளங்களிலும் மீம்ஸ்கள் பரவின. இந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்து கூறும்போது,
தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான அஸ்வின் ‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாகி உள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், 40 இயக்குனர்களிடம் கதை கேட்டேன் என்றும், கதை பிடிக்காவிட்டால் தூங்கி விடுவேன் என்றும் அவர் பேசியது சர்ச்சையாகி உள்ளது.
கதை சொன்ன 40 இயக்குனர்களை அஸ்வின் இழிவுபடுத்தியதாக இயக்குனர்களும், துணை இயக்குனர்களும் கண்டித்துள்ளனர். சமூக வலைத்தளங்களிலும் அவருக்கு எதிராக மீம்ஸ்கள் பரவின. சர்ச்சைக்கு விளக்கம் அளித்து அஸ்வின் கூறும்போது,
‘‘நான் நடித்துள்ள முதல் படத்தின் பாடல் வெளியீட்டு விழா என்பதால் சந்தோசத்தில் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசிவிட்டேன். நான் யோசித்து பேசும் ஆள் இல்லை. முன்னதாகவே தயார் செய்து பேசமாட்டேன். விளையாட்டுக்காக 40 இயக்குனருடன் கதை கேட்டேன் என்றும், கதை பிடிக்காவிட்டால் தூங்கிவிடுவேன் என்றும் பேசினேன்.
40 என்பது விளையாட்டுக்காக சொன்ன கணக்குதான், உண்மை அல்ல. நான் திமிராக பேசும் ஆள் இல்லை. நான் விளையாட்டாக சொன்ன சில வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது வருத்தமாக உள்ளது” என்றார்.
Related Tags :
Next Story