தொகுப்பாளர்களாக அறிமுகமாகும் சோயப் மாலிக் - சானியா மிர்சா தம்பதி ...!
பாகிஸ்தானின் முதல் தனியார் ஓடிடி தளத்தில் இவர்கள் தொகுப்பாளர்களாக அறிமுகமாகிறார்கள்.
துபாய் ,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சோயப் மாலிக். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இசான் மிர்சா மாலிக் என்ற 3 வயது மகன் உள்ளான்.
தம்பதி இருவரும் தாங்கள் சார்ந்த விளையாட்டு துறையில் சுறுசுறுப்பாக இருக்கும் நேரத்தில் தற்போது இருவரும் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களம் இறங்க உள்ளனர். பாகிஸ்தானின் முதல் தனியார் ஓடிடி தளத்தில் இவர்கள் தொகுப்பாளர்களாக அறிமுகமாகிறார்கள்.
இருவரும் இணைந்து சுவாரஸ்யமான பேச்சு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளனர். அதற்கு தி ஷோயப் & சானியா ஷோ என பெயரிட்டுள்ளனர்.இது குறித்து பத்திரிகையாளர்களிடம் சோயப் மாலிக் - சானியா மிர்சா கூறியதாவது:
நாங்கள் அனைவரும் இணைந்து புதிய விஷயங்களை ஒன்றாக முயற்சி செய்து அனுபவிக்க விரும்புகிறோம். எனவே இந்த வாய்ப்பில் நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம் . நாங்கள் சவால்களை விரும்புகிறோம், எனவே விளையாட்டிலிருந்து ஊடகத்திற்கு மாறுவது மிகவும் உற்சாகமாக இருக்கும் என நம்புகிறோம்.
நிகழ்ச்சி எப்படி இருக்கும் என்று பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சானியா, "இது முழுவதுமாக நகைச்சுவை நிகழ்ச்சி அல்ல, ஆனால் இது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகும். முடிந்தவரை வேடிக்கையாக இருக்க முயற்சிப்போம், இன்னும் அர்த்தத்தைத் தேட முயற்சிப்போம். இந்த நிகழ்ச்சி காதலுக்கும் சிரிப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் " என்று சானியா தெரிவித்தார்.
Related Tags :
Next Story