ஐஎம்டிபி தரவரிசை 2021: சிறந்த 10 இணையத் தொடர்களில் தமன்னாவின் " நவம்பர் ஸ்டோரி "


ஐஎம்டிபி தரவரிசை 2021: சிறந்த 10 இணையத் தொடர்களில் தமன்னாவின்  நவம்பர் ஸ்டோரி
x
தினத்தந்தி 10 Dec 2021 3:52 PM IST (Updated: 10 Dec 2021 3:52 PM IST)
t-max-icont-min-icon

ஐஎம்டிபி தரவரிசையில் 2021 ஆம் ஆண்டின் சிறந்த 10 இணையத் தொடர்களில் "நவம்பர் ஸ்டோரி" 9 வது இடத்தை பிடித்துள்ளது.

புதுடெல்லி,

ஐஎம்டிபி தரவரிசையில் 2021 ஆம் ஆண்டின் சிறந்த 10 இணையத் தொடர்களில் பட்டியல் சமீபத்தில் வெளியானது . இந்த பட்டியலில் நடிகை தமன்னா நடித்த " நவம்பர் ஸ்டோரி " திரைப்படம் இடம்பெற்றுள்ளது.  

இயக்குனர் இந்திரா சுப்பிரமணியன் இயக்கத்தில் இந்த ஆண்டு ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்ற  இந்த திரைப்படம் திரில்லர் கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டு இருந்தது.

தற்போது இது ஐஎம்டிபி தரவரிசையில் 2021 ஆம் ஆண்டின் சிறந்த 10 இணையத் தொடர்களில்  9 வது இடத்தை பிடித்துள்ளது. ஐஎம்டிபி தரவரிசையில் 2021 ஆம் ஆண்டின் சிறந்த 10  இணையத் தொடர்கள் பின்வருமாறு :

1.ஆஸ்ப்பிரண்ட்ஸ் , 2. திந்தோரா ,3.தி பேமிலி மேன் , 4. தி லாஸ்ட் ஹாவேர் 5.சன் பிளவர் ,6.கேண்டி , 7.ரே , 8.கிரகாண் 9.நவம்பர் ஸ்டோரி 10.மும்பை டைரிஸ் 26/11

Next Story