இந்தி படத்தில் ரகுமான்


இந்தி படத்தில் ரகுமான்
x
தினத்தந்தி 10 Dec 2021 4:52 PM IST (Updated: 10 Dec 2021 4:52 PM IST)
t-max-icont-min-icon

பிரபல இயக்குனர் விகாஸ் பால் இயக்கும் இரண்டு பாகங்களை கொண்ட ‘கண்பத்‘ என்ற இந்தி படத்தில் ரகுமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தமிழ் திரை உலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர் ரகுமான். இவர் நடித்த புதுப்புது அர்த்தங்கள் திருப்புமுனை படமாக அமைந்தது. மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது அவருக்கு இந்தி பட வாய்ப்பு வந்துள்ளது. 

பிரபல இயக்குனர் விகாஸ் பால் இயக்கும் இரண்டு பாகங்களை கொண்ட ‘கண்பத்‘ என்ற இந்தி படத்தில் ரகுமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் டைகர் ஷெராப், கிரிதி சனோன் ஆகியோரும் நடிக்கின்றனர். படப்பிடிப்பு லண்டனில் தொடங்கி உள்ளது. ரகுமான் கூறும்போது, ‘‘இந்தி படத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 

மூன்று மாதம் பயிற்சி எடுத்து நடிக்கிறேன். தென்னிந்திய நடிகர்களை இந்தி பட உலகினர் மதிக்க மாட்டார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் அதற்கு மாறாக இந்தியில் எனக்கு மரியாதை கிடைத்தது. பெரிய நடிகர் சிறிய நடிகர் என்ற பாகுபாடு இல்லாமல் இயக்குனர் விகாஸ் பால், டைகர் ஷெராப் ஆகியோர் எல்லோரிடமும் நண்பர்களாக பழகியது ஆச்சரியமாக இருந்தது” என்றார்.

Next Story