பார்முலா கார் பந்தயத்தில் பங்கேற்கிறார் நடிகர் ஜெய்..!


பார்முலா கார் பந்தயத்தில் பங்கேற்கிறார் நடிகர் ஜெய்..!
x
தினத்தந்தி 12 Dec 2021 12:54 AM IST (Updated: 12 Dec 2021 12:54 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் ஜெய் பார்முலா கார் பந்தயத்தில் பங்கேற்கிறார்.

சென்னை,

நடிகர் ஜெய் நடிப்பில் விரைவில் சுசீந்திரன் இயக்கும் ‘சிவ சிவ’ படம் வெளியாகவுள்ளது. அடுத்ததாக  டைரக்டர் சுந்தர் சி படத்திலும், அட்லீ தயாரிக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். நடிப்பதோடு, இசையமைப்பாளராகவும் மாறியுள்ளார். நடிப்பதை தாண்டி ஜெய், கார் ரேஸ் பந்தயங்களில் பங்கேற்பதிலும் ஆர்வம் கொண்டவர்.

இந்த நிலையில் தற்போது ஜெய் எம்.ஆர்.எப் மற்றும் ஜா மோட்டார் ஸ்போர்ட்ஸ் இணைந்து நடத்தும் பார்முலா கார் பந்தயத்தில் பங்கேற்கிறார். சென்னையில் மூன்று நாள் நடைபெறும் இப்போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த போட்டியில் 6-ம் எண் கொண்ட காரை ஜெய் பயன்படுத்துகிறார்.

நேற்று தகுதிச்சுற்றும் இன்று பந்தயமும் நடைபெறுகிறது. இந்த போட்டியில் அவருக்கு ‘எண்ணித்துணிக’ திரைப்பட குழு ஸ்பான்சர் செய்கிறது. 3 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் கார் பந்தயத்தில் நடிகர் ஜெய் களமிறங்குகிறார். 

Next Story