பொதுமக்களுடன் சேர்ந்து ரூ.300 டிக்கெட்டில் தரிசனம் செய்த சமந்தா!


பொதுமக்களுடன் சேர்ந்து ரூ.300 டிக்கெட்டில் தரிசனம் செய்த சமந்தா!
x
தினத்தந்தி 12 Dec 2021 10:19 AM IST (Updated: 12 Dec 2021 10:19 AM IST)
t-max-icont-min-icon

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை சமந்தா சுவாமி தரிசனம் செய்தார்.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை சமந்தா நேற்று சுவாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்கு பின் வெளியே வந்த சமந்தாவை சூழ்ந்த ரசிகர்கள், அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து பத்திரிகையாளர்கள் பேச முயன்ற போது சமந்தா பதில் ஏதும் அளிக்காமல் கடந்து சென்றார்.  

நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு திருப்பதி ஏழுமலையானை சமந்தா தரிசிப்பது இதுவே முதல் முறையாகும். விஐபி தரிசனத்தில் செல்லாத சமந்தா 300 ரூபாய் டிக்கெட்டில் பொதுமக்களுடன் சேர்ந்து சென்று தரிசனம் செய்தார். 

Next Story