தமிழ்ப்பட உலகில் ‘தொழில்நுட்ப கலைஞர்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைப்பதில்லை’: வனிதா விஜயகுமார்

தமிழ்ப்பட உலகில் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைப்பதில்லை என்று வனிதா விஜயகுமார் பேசினார்.
ஒரு புதிய படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வனிதா விஜயகுமார் அழைக்கப்பட்டு இருந்தார். அதில் கலந்துகொண்ட வனிதா விஜயகுமார் துணிச்சலாக தன் கருத்துகளை வெளியிட்டார். அவர் பேசியதாவது:-
‘‘இந்த படத்தின் டிரைலரை பார்த்து பிரமித்துப் போனேன். அதில் தொழில்நுட்ப கலைஞர்களின் பங்கு அசாதாரணமானதாக இருந்தது. தமிழ் படஉலகில் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான அங்கீகாரம் குறைவு. திறமையான தொழில்நுட்ப கலைஞர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. இந்த படம் வெளியான பிறகு அந்த குறை நீங்கும்.
‘லகான், ’ ‘தங்கல்’ ஆகிய இந்தி படங்களுக்கு இணையாக தென்னிந்திய கலைஞர்களால் படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. படத்தில் இடம்பெற்றுள்ள மண்சாலை கார் பந்தயத்தை வடிவமைத்த விதம் என்னை ஆச்சரியப்படுத்தியது. அந்த காட்சிகளில் சர்வதேச தரம் தெரிந்தது.’’
இவ்வாறு வனிதா விஜயகுமார் பேசினார்.
Related Tags :
Next Story