தென்னிந்திய நடிகர்கள் பற்றி அதிக டுவிட் : முதல் இடத்தில் விஜய்...


தென்னிந்திய நடிகர்கள் பற்றி அதிக டுவிட் : முதல் இடத்தில்  விஜய்...
x
தினத்தந்தி 12 Dec 2021 10:09 AM GMT (Updated: 12 Dec 2021 10:09 AM GMT)

தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் பற்றி அதிகம் டுவிட் செய்யப்பட்டுள்ள பட்டியலை டுவிட்டர் வெளியிட்டுள்ளது.

சென்னை, 

ஆண்டுதோறும் சமூக வலைதளமான டுவிட்டரில் நடிகர்கள் பற்றி அதிகம் டுவீட் செய்யப்பட்டுள்ள பட்டியல் குறித்து சர்வே எடுப்பது வழக்கம் . அந்தவகையில் இந்த வருடம் டுவிட்டரில் தென்னிந்திய திரைப்பட  நடிகர்கள் பற்றி அதிகம் டுவிட்  செய்யப்பட்டுள்ள பட்டியலை டுவிட்டர் வெளியிட்டுள்ளது. 

அதன்படி டுவிட்டர் வெளியிட்டுள்ள நடிகர்கள்  பட்டியலில்  விஜய் முதல் இடத்தை பிடித்துள்ளார் .பவன் கல்யாண் 2-வது இடத்தையும், மகேஷ் பாபு 3-வது இடத்தையும், சூர்யா 4-வது இடத்தையும், ஜூனியர் என்.டி.ஆர். 5-வது இடத்தையும், அல்லு அர்ஜூன் 6-வது இடத்தையும், ரஜினிகாந்த் 7-வது இடத்தையும், ராம் சரண் 8-வது  இடத்தையும், தனுஷ்  9-வது இடத்தையும, அஜித் 10-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

அதேபோல் நடிகைகள் பற்றி அதிகம்  டுவிட் செய்யப்பட்ட  பட்டியலையும்  டுவிட்டர் வெளியிட்டுள்ளது. 

நடிகைகளில் கீர்த்தி சுரேஷ் முதல் இடம் பிடித்துள்ளார். பூஜா ஹெக்டே 2-வது இடத்தையும், சமந்தா 3-வது இடத்தையும், காஜல் அகர்வால் 4-வது இடத்தையும், மாளவிகா மோகனன் 5-வது இடத்தையும், ராகுல் ப்ரீத்சிங் 6-வது இடத்தையும், சாய் பல்லவி 7-வது இடத்தையும், தமன்னா 8-வது இடத்தையும், அனுஷ்கா 9-வது இடத்தையும், அனுபமா 10-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

Next Story