விஜய் பட வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷ்


விஜய் பட வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷ்
x
தினத்தந்தி 13 Dec 2021 3:04 PM GMT (Updated: 2021-12-13T20:34:22+05:30)

விஜய்யின் 66-வது படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிப்பதாக உலவி வந்த வதந்திக்கு அவரே முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

விஜய் ’பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து பிரபல தெலுங்கு டைரக்டர் வம்சி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இது விஜய்க்கு 66-வது படம். தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராக உள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க இருப்பதாக இணைய தளங்களில் தகவல் பரவியது. ஏற்கனவே விஜய்யுடன் ’பைரவா’ ’சர்கார்’ ஆகிய படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். 

புதிய படத்தில் விஜய்யுடன் மீண்டும் நடிக்கிறீர்களா? என்று கீர்த்தி சுரேசிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர் கூறும்போது, ‘‘விஜய்யின் 66-வது படத்தில் நான் நடிக்கவில்லை. அவர் ஜோடியாக நான் நடிப்பதாக வெளியான தகவல் வதந்திதான்’’ என்றார். இதையடுத்து விஜய்யின் 66-வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.


Next Story