சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களால் கவனம் ஈர்க்கும் ரைசா
சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை ரைசா பதிவிட்டுள்ளார்.
மாடலிங் துறையில் இருந்து சினிமாவில் கால்பதித்த நடிகைகளில் ரைசா வில்சனும் ஒருவர். இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் கவனம் ஈர்த்தார். ‘வேலையில்லா பட்டதாரி-2’ படத்தில் கஜோலுக்கு உதவியாளராக ரைசா வில்சன் நடித்திருந்தார். அதன் பின்னர் ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். தற்போது ஜி.வி.பிரகாசுடன் ‘காதலிக்க யாருமில்லை’, விஷ்ணு விஷாலுடன் ‘எப்.ஐ.ஆர்.’, பிரபுதேவாவுடன் ‘பொய்க்கால் குதிரை’, ‘சூர்ப்பனகை’ மற்றும் ‘தி சேஸ்’ போன்ற திரைப்படங்களில் ரைசா நடித்து வருகிறார். இந்தநிலையில் சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை ரைசா பதிவிட்டுள்ளார். நீச்சல் குளத்தில் தண்ணீரில் இருப்பது போன்ற படுகவர்ச்சியான புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். பட வாய்ப்புக்காகவே இதுபோன்ற படங்களை அவர் வெளியிட்டுள்ளதாக சிலர் விமர்சிக்கிறார்கள். அதேவேளை இந்த புகைப்படங்களுக்கு ‘லைக்’குகளும் குவிந்து வருகிறது.
Related Tags :
Next Story