சேரனின் 36 வது படம் "தமிழ்க்குடிமகன் "


சேரனின் 36 வது படம் தமிழ்க்குடிமகன்
x
தினத்தந்தி 16 Dec 2021 11:41 AM IST (Updated: 16 Dec 2021 11:41 AM IST)
t-max-icont-min-icon

சேரன் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் ,இந்த படத்திற்கு ‘தமிழ்க்குடிமகன்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்

சேரனின் 36 வது படம் "தமிழ்க்குடிமகன் "

சென்னை

பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட சிறந்த படங்களை இயக்கியவர் சேரன். கடைசியாக திருமணம் படத்தை இயக்கி இருந்தார். தற்போது நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், சேரன் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு ‘தமிழ்க்குடிமகன்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதில் கதாநாயகியாக ஸ்ரீபிரியங்கா நடிக்கிறார். மேலும் லால், துருவா, தீபா, வேலாராமமூர்த்தி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

சேரன் நாயகனாக நடிக்கும் ‘தமிழ்க்குடிமகன்’  படம் சென்னையில் தொடங்கப்பட்டது. சென்னை பிரசாத் லேபில் நடந்த தொடக்கவிழா நிகழ்ச்சியில் இயக்குனர்கள் வெற்றிமாறன், அமீர், சிம்புதேவன், மாரி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் இந்த தொடக்கவிழாவில் கலந்து கொண்டு சேரனை வாழ்த்தினார்.

லட்சுமி கிரியேஷன்ஸ் தமிழ்க்குடிமகனை தயாரிக்கிறது. இசக்கி கார்வண்ணன் படத்தை இயக்குகிறார். ராஜேஷ் யாதவ் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். சமீபமாக தமிழில் அதிகப்படங்களுக்கு இசையமைக்கும் சாம் சிஎஸ் தமிழ்க்குடிமகனுக்கு இசையமைக்கிறார்.

நடிகராக இது சேரனுக்கு 36-வது படம் என கூறப்படுகிறது. இதுகுறித்து சேரன் கூறியதாவது:-

இந்த தமிழ்க்குடிமகன் எந்த பெருமை பொங்கும் கூட்டத்தோடும் சேராதவன், ஆனால், எல்லோருக்கும் பிடித்தமானவன் என கூறினார்.

விழாவில் கலந்து கொண்ட வெற்றிமாறன், சிம்புதேவன், மாரி செல்வராஜ், அமீர் ஆகியோருக்கு சமூகவலைத்தளத்தில் நன்றியும் கூறியுள்ளார் சேரன்.


Next Story