போலீஸ் அதிகாரியாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘நெஞ்சுக்கு நீதி’ புகைப்படங்கள் வைரல்..!
நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
சென்னை
பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த ‘ஆர்டிக்கிள் 15’ தமிழில் ‘நெஞ்சுக்கு நீதி’யாக ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார்.
போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார். மேலும், ‘பிக்பாஸ்’ ஆரி, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் உதயநிதி ஸ்டாலினுடன் நடிக்கின்றனர். தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகரின் மகள் ஷிவானி ராஜசேகரும், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியான நிலையில், தற்போது புகைப்படங்களை வெளியிட்டுள்ளது படக்குழு. காவல்துறை அதிகாரியாக உதயநிதியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.
Related Tags :
Next Story