இளையராஜா இசையில், கர்நாடக பாடகிகள்


இளையராஜா இசையில், கர்நாடக பாடகிகள்
x
தினத்தந்தி 19 Dec 2021 11:53 AM IST (Updated: 19 Dec 2021 11:53 AM IST)
t-max-icont-min-icon

சிபிராஜ்-தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும் புதிய படத்தில் இளையராஜா இசையில் பிரபல கர்நாடக இசை பாடகிகள் ரஞ்சனி, காயத்ரி ஆகிய இருவரும் முதன்முதலாக பாடியிருக்கிறார்கள்.

படஅதிபர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்துள்ள புதிய படத்துக்கு, ‘மாயோன்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். அறிமுக டைரக்டர் என்.கிஷோர் இயக்கி யிருக்கிறார். சிபிராஜ் கதையின் நாயகனாக நடிக்க, இவருக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்து வருகிறார்.

இவர்களுடன் ராதாரவி, கே.எஸ்.ரவிகுமார், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இளையராஜா இசையமைக்கிறார். அவருடைய இசையில் பிரபல கர்நாடக இசை பாடகிகள் ரஞ்சனி, காயத்ரி ஆகிய இருவரும் முதன்முதலாக பாடியிருக்கிறார்கள். “மாயோனே மணிவண்ணா” என்று தொடங்கும் அந்த பாடலை இளையராஜா எழுதியிருக் கிறார். படத்தின் உள் ளடக்கத்தையும் இது பிரதிபலிக்கும் என்று கூறுகிறார், டைரக்டர் கிஷோர்.

Next Story