‘படுக்கை அறை ரகசியங்களை படமாக்குவதா?’ டைரக்டருடன் மோதிய நடிகை


‘படுக்கை அறை ரகசியங்களை படமாக்குவதா?’ டைரக்டருடன் மோதிய நடிகை
x
தினத்தந்தி 19 Dec 2021 2:27 PM IST (Updated: 19 Dec 2021 2:27 PM IST)
t-max-icont-min-icon

படுக்கை அறை ரகசியங்களை படமாக்குவதா? என்று கதாநாயகி அனகாவுக்கும், டைரக்டர் சரவண சுப்பையாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அஜித் நடித்த ‘சிட்டிசன்’ படத்தை இயக்கிய சரவண சுப்பையா அடுத்து, ‘மீண்டும்’ என்ற புதிய படத்தை இயக்கி இருக்கிறார். இது, பரபரப்பான காட்சிகளை கொண்ட படம். படத்தில் புதுமுகம் கதிரவனுடன் அவருக்கு ஜோடியாக அனகா நடித்து இருக்கிறார். படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்தது. அங்கு கதாநாயகன்-கதாநாயகி சம்பந்தப்பட்ட முதல் இரவு படுக்கை அறை பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இந்த காட்சி தொடர்பாக அனகாவுக்கும், டைரக்டர் சரவண சுப்பையாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 

படுக்கை அறை ரகசியங்களை படமாக்க கூடாது என்று அந்த காட்சியை படமாக்க அனகா எதிர்ப்பு தெரிவித்தார். அவரை சமாதானப்படுத்தி, கதைக்கு அந்த காட்சி தேவைப்படுகிறது என்று கூறி, நடிக்க வைத்தனர். அதன்பிறகு அந்த காட்சியின் நீளத்தை குறைக்க வேண்டும் என்று அனகா வாக்குவாதம் செய்தார். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. காட்சியின் நீளத்தை குறைத்த பின், அனகா அந்த காட்சியில் நடித்து முடித்தார்.


Next Story