படம் பட்ஜெட்டில் பாதியை சம்பளமாக பெறும் பிரபாஸ்


படம் பட்ஜெட்டில் பாதியை சம்பளமாக பெறும் பிரபாஸ்
x
தினத்தந்தி 20 Dec 2021 2:03 PM IST (Updated: 20 Dec 2021 2:03 PM IST)
t-max-icont-min-icon

பிரபாஸ் சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி இருக்கிறார்.படத்தின் பட்ஜெட்டில் பாதியை சம்பளமாக கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகுபலி படத்துக்கு பிறகு இந்தியா முழுவதும் பிரபலமான தெலுங்கு நடிகர் பிரபாஸின் படங்கள் அனைத்து மொழிகளிலும் வெளியாகி வசூல் பார்க்கின்றன. இதனால் பிரபாஸ் சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி இருக்கிறார். படத்தின் பட்ஜெட்டில் பாதியை சம்பளமாக கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஆதிபுருஷ் பட பட்ஜெட்டில் பாதியை சம்பளமாக வாங்கி இருப்பதாக கூறப்பட்டது. 

தற்போது அடுத்து பிரபாஸ் நடிக்க உள்ள ஸ்பிரிட் படத்துக்கு ரூ.150 கோடி சம்பளம் பேசி உள்ளதாக உறுதிப்படுத்தி உள்ளனர். இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.300 கோடி என்றும் அதில் பாதி தொகையை பிரபாஸ் சம்பளமாக பெறுகிறார் என்றும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி சர்ச்சையை கிளப்பி உள்ளது. சிலர் பிரபாசை விமர்சித்துள்ளனர். இன்னும் சிலர் இது பெரிய சாதனை என்று பாராட்டுகின்றனர். 

இந்தியில் அதிக சம்பளம் பெறும் நடிகர்கள் பட்டியலில் இருந்த சல்மான்கான், அக்‌ஷய்குமார் ஆகியோரை பிரபாஸ் பின்னுக்கு தள்ளி உள்ளார். மேலும் சில பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க பிரபாசை படக்குழுவினர் அணுகி இருப்பதாகவும் அந்த படங்களின் பட்ஜெட்டிலும் பாதியை சம்பளமாக பிரபாஸ் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


Next Story