அச்சு அசலாக நடிகை ஸ்ரீ தேவியை போலவே இருக்கும் பெண்! வைரலாகும் புகைப்படம்
அவர் ரசிகர்களை கவரும் விதமாக நடிகை ஸ்ரீதேவியை போன்றே அலங்காரம் செய்தும் பாவனைகள் செய்தும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மேலும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கி வருகிறார்.
மும்பை,
நடிகை ஸ்ரீதேவியை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது. அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் எப்போதுமே உண்டு. தமிழகத்தை சேர்ந்த அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இந்தி சினிமாவை கலக்கியவர். தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரர்.
இந்த நிலையில், அச்சு அசலாக நடிகை ஸ்ரீ தேவியை போலவே இருக்கும் பெண் ஒருவர் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி உள்ளார். அவருடைய பெயர் தீபாலி சவுத்ரி. தீபாலி சவுத்ரியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்த இண்டர்நெட் பயனாளர்கள் சிலர் இந்த பெண் அச்சு அசல் மறைந்த நடிகை ஸ்ரீதேவியை போலவே இருப்பதை கண்டு ஆச்சரியமடைந்துள்ளனர்.
அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை கிட்டத்தட்ட 30 ஆயிரம் மக்கள் பின்தொடருகிறார்கள்.
Related Tags :
Next Story