ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம் திரைப்படம் உலகளவில் சுமார் ரூ.4,500 கோடி வசூல் குவித்து சாதனை..!
ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம் திரைப்படம் உலகளவில் சுமார் ரூ.4,500 கோடி வசூல் குவித்து சாதனை படைத்துள்ளது.
சென்னை,
கொரோனா காலத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கும் ஹாலிவுட் படமான 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' பல நாடுகளில் வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. அமெரிக்காவில் முதல் 3 நாட்களில் 260 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.
அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் இதுவரை வெளியான படங்களில் வார இறுதி வசூலில் ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம் திரைப்படம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. வார இறுதி வசூலில் முதல் இடத்தில் 357 மில்லியன் டாலர்கள் வசூலுடன் அவெஞ்சர்ஸ் என்ட்கேம் திரைப்படம் உள்ளது. தற்போது ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம் திரைப்படம், அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் படத்தின் வசூலை (257.7 மில்லியன் டாலர்கள்) முறியடித்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
இந்த திரைப்படம் அமெரிக்காவுக்கு வெளியே வார இறுதியில் 340.8 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. மொத்தமாக உலகம் முழுவதும் இதன் முதல் வார வசூல் இந்திய மதிப்பில் ரூ.4 ஆயிரத்து 500 கோடி ஆகும்.
அமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்துக்கு மேல் உள்ளது. இந்த நிலையில் 4 ஆயிரத்து 336 திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகி முதல் மூன்று நாட்களில் சுமார் ரூ.2 ஆயிரத்து 225 கோடி வசூலித்துள்ளது.
இந்தியாவில் நான்கு நாட்களில் ‘ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' திரைப்படம் ரூ.100 கோடி வசூலைக் கடந்துள்ளது. இந்தியாவில் ‘அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்’ படத்துக்குப் பிறகு முதல் நாளில் அதிக வசூல் செய்த இரண்டாவது ஹாலிவுட் படம் இதுவாகும். மேலும், உலக அளவில் முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த மூன்றாவது படம் என்ற சாதனையை ‘ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' பெற்றுள்ளது.
Related Tags :
Next Story