விஷாலுக்கு வில்லனாக நடிக்கிறார் எஸ்.ஜே. சூர்யா..!
நடிகர் விஷால் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
இயக்குனராக இருந்து நடிகராக மாறிய எஸ்.ஜே. சூர்யா சமீப காலமாக முண்ணனி கதாநாயகர்களின் திரைப்படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது, அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும் திரைப்படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் நடிகர் விஷால், பிரம்மாண்ட பொருட்செலவில் 'எனிமி' திரைப்படத்தின் தயாரிப்பாளர் வினோத் குமார் தயாரிப்பில் பான் இந்தியன் திரைப்படம் (Pan Indian Movie) ஒன்றில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
இந்த திரைப்படத்திற்கு வலுசேர்க்கும் வகையில் பிரபலமான நட்சத்திரங்களை படத்தில் நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகர் எஸ்.ஜே. சூர்யாவிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் எஸ்.ஜே. சூர்யாவும் நடிக்க ஒப்புதல் அளித்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
விஷால் தற்போது அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் 'லத்தி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் முடியும் தருவாயில் உள்ளது. இதைத் தொடர்ந்து விஷால் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் திரைப்படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story