ஆஸ்கார் 2022 - பரிந்துரைக்கப்பட்ட இந்திய திரைப்படங்களின் பட்டியல்
சிறந்த ஆவணப்பட பிரிவில் ‘ரைட்டிங் வித் பயர்’ இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்டு அடுத்த சுற்றுக்கு தேர்வாகி உள்ளது.
சென்னை,
சமீபத்தில் ஆஸ்கார் பட்டியலில் இடம்பெற்றுள்ள படங்கள் பட்டியல் ஆஸ்கார் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் கூழாங்கல் திரைப்படம் இடம்பெற்று இருந்தது.
94வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா அடுத்த வருடம் மார்ச் மாதம் 27-ந் தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. ஆஸ்கார் விருதுக்கு 15 படங்கள் இறுதி செய்யப்பட்டு அதில் ஒரு படத்துக்கு சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கார் விருது வழங்கப்படும்.
இந்த நிலையில், ஆஸ்கார் வெளியிட்டுள்ள இறுதி பட்டியலில் கூழாங்கல் திரைப்படம் இடம்பெறவில்லை. இதன் மூலம் ஆஸ்கார் போட்டியிலிருந்து கூழாங்கல் திரைப்படம் வெளியேறி உள்ளது.
ஆஸ்கார் 2022 பரிந்துரைகளுக்கு தகுதி பெற்ற இந்திய படங்கள் இதோ,
1.கூழாங்கல்
சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் இந்தியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட இந்த படம் ஒரு குடிகாரன், தவறான கணவன் மற்றும் அவனது மனைவிக்கு இடையேயான உறவை படம் ஆராய்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஆஸ்கார் வெளியிட்டுள்ள இறுதி பட்டியலில் கூழாங்கல் திரைப்படம் இடம்பெறவில்லை.
2. ரைட்டிங் வித் பயர்
சிறந்த ஆவணப்பட பிரிவில் இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட இந்த படம், தலித் பெண்களால் நடத்தப்படும் இந்தியாவின் ஒரே செய்தித்தாள் குறித்து கதைக்களம் கொண்டுள்ளது.
3.மானசநமஹா
சிறந்த லைவ் ஆக்ஷன் ஷார்ட் பிரிவில் இந்தியாவிலிருந்து தேர்வான இந்த தெலுங்குப் படம், முன்னும் பின்னுமாக கதை சொல்லும் பாணியில் அமைந்த காதல் கதைக்களம் கொண்ட படமாகும்.
4.சோன்சி
சிறந்த குறும்படமாக தேர்வு செய்யப்பட்ட இந்த 26 நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படம், 8 வயது சிறுமி மற்றும் அவளது கனவில் உருவான நிழற்பறவையை சுற்றி கதைக்களம் கொண்டு அமைந்துள்ளது.
ஆஸ்கார் விருதுக்கு தேர்வான மேற்கண்ட படங்கள் இறுதிப்பட்டியலில் இடம்பிடிக்குமா என்ற அறிவிப்பு பிப்ரவரி 8ம் தேதியன்று வெளியாகும். மார்ச் 27ம் தேதியன்று ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெறும்.
Related Tags :
Next Story