சிவகார்த்திகேயன் நடித்துள்ள‘அயலான்' திரைப்படத்தை வெளியிட தடை : ஐகோர்ட்டு உத்தரவு


சிவகார்த்திகேயன் நடித்துள்ள‘அயலான் திரைப்படத்தை வெளியிட தடை : ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 24 Dec 2021 1:23 AM IST (Updated: 24 Dec 2021 1:23 AM IST)
t-max-icont-min-icon

டேக் என்டெர்டெயின்மென்ட்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வெங்கடேஷ் என்பவர் அயலான் திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

சென்னை, 

நடிகர் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘அயலான்'. இந்த படத்தை ஆர்.ரவிக்குமார் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரிக்கிறது.

இந்நிலையில் ‘டேக் என்டெர்டெயின்மென்ட்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வெங்கடேஷ் என்பவர் அயலான் திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், தங்கள் நிறுவனத்திடம் இருந்து 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் 5 கோடி ரூபாய் கடனாக பெற்றிருந்த நிலையில் தற்போது வட்டியோடு சேர்த்து 6 கோடியே 92 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டியுள்ளது.

தற்போது 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள அயலான் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அயலான் திரைப்படத்தை வருகிற ஜனவரி 3-ந்தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

Next Story