ஆடை இல்லாத புகைப்படம் கேட்ட ரசிகர் அனுப்பிவைத்த நடிகை...!


ஆடை இல்லாத புகைப்படம் கேட்ட ரசிகர் அனுப்பிவைத்த நடிகை...!
x
தினத்தந்தி 25 Dec 2021 5:42 PM IST (Updated: 25 Dec 2021 5:42 PM IST)
t-max-icont-min-icon

ரசிகர் ஒருவர் பூஜா ஹெக்டேவிடம் அவரது ஆடை இல்லாத புகைப்படத்தை வெளியிடுமாறு கூறியுள்ளார்.

சென்னை

சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலந்துரையாடினார். அப்போது இவரது பலவிதமான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் எழுப்பிய சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பூஜா மிகவும் வெளிப்படையாக பதிலளித்தார். 

இதில் ஒரு ரசிகர் கேட்ட கேள்வி அவரையே அதிர்ச்சியடைய வைத்தது. அதாவது திடீர் என அந்த ரசிகர் பூஜா ஹெக்டேவிடம் அவரது ஆடை இல்லாத புகைப்படத்தை வெளியிடுமாறு கூறியுள்ளார். ஆனால் பூஜா ஹெக்டே பெரிதாக அலட்டி கொள்ளாமல்... தன்னுடைய கால்களின் புகைப்படத்தை பதிவிட்டு அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் இவர் இதனை இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் இவர் போட்ட பதிவு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

பூஜா ஹெக்டே தற்போது, பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷியாம் திரைப்படம் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வெளியான இந்த டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தெலுங்கிலும், நடிகை பூஜா ஹெக்டே ராம் சரணுக்கு ஜோடியாக... ஆச்சார்யா படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story