புதிய படத்தை உறுதி செய்த தனுஷ்


புதிய படத்தை உறுதி செய்த தனுஷ்
x
தினத்தந்தி 27 Dec 2021 3:00 AM IST (Updated: 27 Dec 2021 3:00 AM IST)
t-max-icont-min-icon

அருண் மாதேஸ்வரன் டைரக்டு செய்யும் படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. இந்த தகவலை தனுஷ் தற்போது உறுதி செய்துள்ளார்.

தனுஷ் இந்தியில் நடித்த அந்த்ராங்கிரே படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி உள்ளது. கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் படத்திலும் தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்து முடித்துள்ளார். தற்போது மித்ரன் ஜவஹர் இயக்கும் திருச்சிற்றம்பலம், செல்வராகவனின் நானே வருவேன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். முதல் தடவையாக தெலுங்கு படமொன்றிலும் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு வாத்தி என்று பெயர் வைத்துள்ளனர். இது தமிழிலும் வருகிறது. இந்த படங்களுக்கு பிறகு ‘சாணி காயிதம்’, ‘ராக்கி’ ஆகியப் படங்களை இயக்கி உள்ள அருண் மாதேஸ்வரன் டைரக்டு செய்யும் படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. இந்த தகவலை தனுஷ் தற்போது உறுதி செய்துள்ளார். 

இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ”ஆமாம். உங்களுடைய யூகங்கள் உண்மைதான். அருண் மாதேஸ்வரன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கும் அதிர்ஷ்டசாலி நான் தான். மற்ற தகவல்கள் விரைவில்” என்று கூறியுள்ளார்.


Next Story